உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 50; தனியார் மருந்து கடையில் பணிபுரிகிறேன். சிறுவர்மலர் இதழை தவறாமல் படித்து வருகிறேன். உடன் பழகுவோரை வாசிக்க ஊக்குவிப்பேன்.அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய் விளங்குகிறது, 'அதிமேதாவி அங்குராசு!' பகுதி. குன்றின் மேலிட்ட விளக்காய் ஜொலிக்கிறது, 'குட்டி குட்டி மலர்கள்!' பகுதி. வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது, 'மொக்க ஜோக்ஸ்!' பகுதி. பட்டுப்போர்த்தி பாதுகாக்கும் வகையில், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி அழகு ஒளிர மிளிர்கிறது.ஒவ்வொரு சனிக் கிழமையும், இல்லத்திற்கு விருந்தினர் போல வருகை தந்து மகிழ்விக்கிறது. உறவினர், நண்பர்கள் இல்ல திருமணம், புதுமனை புகுவிழா மற்றும் பிறந்த நாள் நிகழ்வுக்கு செல்லும் போது, பரிசுடன் சிறுவர்மலர் இதழையும் தந்து மகிழ்கிறேன். இந்த அற்புத சேவையை இறைவனே வெற்றிக்குடை பிடித்து காப்பான். சிறுவர்மலர் இதழ் ஆற்றி வரும் உன்னத செயலுக்கு நன்றி கூறுகிறேன்!- ஜான் ராண்ட்ஜன், திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !