உள்ளூர் செய்திகள்

குளிர்ச்சி தரும் மண்பானை!

மண்பானையில் நீர் குளிர்ச்சி பெறுவது, 'ஆவியாதல்' என்ற அறிவியல் நிகழ்வால் நடக்கிறது. மண்பானையில் நுண்துளைகள் ஏராளம். இதன் வழியாக சேமிக்கப்படும் நீர், தொடர்ந்து ஆவியாகிறது. இதனால், பானையின் வெப்ப நிலை குறைந்து, நீர் குளிர்ச்சியடைகிறது. குளிர்சாதனப் பெட்டியில் குளிர்விக்கப்படும் நீர், உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மண் பானை நீரை பருகினால் தீங்கு நேராது. கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. மண்பானையில் உள்ள நீர் அருந்துவதால் இதை தடுக்கலாம்!- கவிதா பாலாஜி கணேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !