உள்ளூர் செய்திகள்

பாட்டியின் பாசம்!

அன்று, கண்ணனுக்கு கணக்கு தேர்வு. திண்ணையில் அமர்ந்து, கணக்குகளை போட்டு பார்த்தான். அருகில் அமர்ந்திருந்தார் பாட்டி.''கண்ணா... குடிக்க தண்ணீர் எடுத்து வாயேன்...'' புத்தகங்களை அப்படியே வைத்து, சமையல் அறைக்கு சென்றான். தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான். பின், பள்ளிச் செல்ல தயார் ஆனான்.''வெற்றிலை பெட்டியை எடுத்து வா கண்ணா...'' கண்ணனுக்கு கடுப்பாய் இருந்தது. அம்மாவுக்கு அடங்கி அமைதியானான். வெற்றிலை பெட்டியை கொடுத்து, வேகமாக வெளியேறினான்.தெரு முனைக்கு சென்ற போது, ''கண்ணா... கண்ணா...'' என்ற அழைப்பு குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான்.வேகமாக வந்து கொண்டிருந்தார் பாட்டி.''ஐயோ பாட்டி... இவ்வளவு துாரம் ஏன் நடக்கிறீங்க...''திரும்பி ஓடி வந்தான் கண்ணன்.''பாட புத்தகத்தை விட்டு சென்றால், கணக்குகளை எப்படி செய்வாய்...'' செல்லமாக கோபித்தபடி புத்தகங்களை கொடுத்தார் பாட்டி.அவரிடம் கோபத்துடன் நடந்து கொண்டதை எண்ணி வருந்தினான்.பின், ஆசிர்வாதம் பெற்று, மகிழ்ச்சியுடன் தேர்வுக்கு புறப்பட்டான் கண்ணன். குட்டீஸ்... பெரியோரை மதிக்கும் நற்குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !