உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 43; இல்லத்தரசியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழில், 'ஸ்கூல் கேம்பஸ்' படிக்கும் போது, பள்ளி பருவ நினைவுகள் மனதில் அரும்பி மலர்கின்றன. 'மொக்க ஜோக்ஸ்' படித்தவுடன், 'இவ்வாறு தானே இளமை பருவத்தில் நாமும் செய்தோம்' என்ற எண்ணம் கூடுதல் சிரிப்பை தருகிறது. புதிய விஷயங்களை, 'அதிமேதாவி அங்குராசு' வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது. சிறுகதை படித்தால், குழந்தையாக மாறி விடுகிறேன். சிறுவர்கள் வரையும், 'உங்கள்பக்கம்' பகுதி ஓவியங்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. சமையல் செய்வதை, 'மம்மீஸ் ெஹல்த்தி கிச்சன்' எளிதாக்குகிறது. மூளைக்கு வேலையாக, புதிர் பகுதி உள்ளது. ரசிக்க, ருசிக்க, சிரிக்க, வாசிக்க, வரைய, பரிசு பெற, பண்பு அடைய முழுமையான இதழாக சிறுவர்மலர் இதயத்தில் குடி கொண்டுள்ளது.- ம.வசந்தி, விழுப்புரம்.தொடர்புக்கு: 96774 13716


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !