வெந்தயம்!
வெந்தயமும், அதன் கீரையும் உலகம் முழுதும் முக்கியமான உணவுப் பொருளாக பயன்படுகிறது. வெந்தயத்தில், நீர், புரதம், கொழுப்பு, மாவு சத்துக்கள் உள்ளன. சுண்ணாம்பு, சோடியம், பொட்டாஷியம் போன்ற தாதுக்களும், தயமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம் மற்றும் வைட்டமின் - ஏ சத்தும் உள்ளன.வெந்தயம் ஊற வைத்த நீரைக் குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடித்தால், அஜீரண கோளாறில் இருந்து விடுபடலாம். செரிமான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். மோரில், வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட்டால், வாய்வு, வயிற்று பொருமல் நீங்கும். உடல் சூட்டை கட்டுப்படுத்தும். ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து உடலில் பூசினால் பருக்கள் மறையும்.- பி.சி.ரகு