வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 59; பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை விரும்பி படிக்கிறேன். வண்ணப் படக்கதை, சிறுகதைகளை, அக்கம் பக்கத்து சிறுவர், சிறுமியருக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். தோழியர் குடும்ப குழந்தைகளுக்கும் பரிந்துரைத்து வருகிறேன்.மழலையர் பள்ளிக்கு செல்கிறாள் என் பேத்தி. புள்ளிகளை இணைத்து, படத்தை முழுமையாக்கும் வித்தையை ஒருமுறை கற்றுக் கொடுத்தேன். ஒவ்வொரு வாரமும் தொடர்கிறாள். எண், எழுத்து வடிவங்களை அறிய இப்பழக்கம் உறுதுணையாக உள்ளது. வண்ணம் தீட்டுவது, வித்தியாசங்கள் கண்டுபிடிப்பது என, விருப்பத்துடன் செய்கிறாள்.எழுத்துக்களே அறிமுகமாகாத நிலையில், சிறுவர்மலர் பரிச்சயத்தால், 'அம்மா இங்கே வா... வா...' பாடலை இனிமையாகப் பாடி, முதல் பரிசு பெற்றிருக்கிறாள். இவ்வாறு, தாய்மொழியாம் அமுதத் தமிழை கற்பதில் மழலைகளையும் ஆர்வப்படுத்துகிறது, சிறுவர்மலர். சிந்திக்கும் திறன் மற்றும் கணித ஆற்றலை மேம்படுத்துகிறது. அறத்தை கற்பித்து, வருங்கால தலைவர்களை செம்மைப் படுத்தும் பணியை செய்யும் சிறுவர்மலர் இதழை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.- வெ.விஜயலட்சுமி, சென்னை.தொடர்புக்கு: 94448 44421