வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 66; பல ஆண்டுகளாக, சிறுவர்மலர் படிக்கிறேன். இது ஒரு விருட்சம்; பல வண்ண மலர்கள் பூக்கின்றன. ஒவ்வொரு இதழிலும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. குட்டிகள் முதல், வயதானவர் வரை படிக்க ஏற்ற வகையில் உள்ளது!முதலில் என் பாட்டி கூறிய கதைகளை தான், என் பேரன்களுக்கு சொல்லி வந்தேன். பின், சிறுவர்மலர் இதழில் படித்தவற்றை பகிர்ந்து வந்தேன். மகன் மற்றும் மகள் குழந்தைகள் ஆர்வமுடன் கேட்டு வந்தனர்.இப்போது, சிறுவர்மலர் புத்தகம் வந்ததும் முதல் ஆளாக படித்து, எனக்கு கதை சொல்கின்றனர். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உணர்ச்சிப் பெருக்கால், அழுகை வந்து விடுகிறது. முக்கிய புத்தகங்களை சேகரிக்கும் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே கடைபிடிக்கிறேன். சேகரித்துவைத்திருப்பதை பேரக்குழந்தைகளுக்கு கொடுப்பேன். கொரோனா தொற்று காலத்தில், அவற்றை எல்லாம் மீண்டும் படித்து மகிழ்ந்தோம். எல்லாவற்றுக்கும் காரணம், சிறுவர்மலர் இதழ் தான். இது, பல்லாண்டு மலர இறைவனை வேண்டி வணங்குகிறேன்.- வி.கிருஷ்ணவேணி, கடலுார்.