உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது 70; கும்பகோணம் அருகில் திப்பிராஜபுரம் கிராமத்தில் படித்தேன். முன்பு, கூட்டு குடும்பங்களில் குழந்தைகளுக்கு கதை சொல்லி மகிழ்வர் முதியவர்கள். அதன் மூலம், நல்ல பழக்க வழக்கங்கள் வளர்ந்தன. இப்போது, அருகி வருகிறது. இந்த நிலையில், குழந்தைகளுக்கு, நீதியுடன் கதைகள் சொல்லி தர உதவுவது, சிறுவர்மலர் மட்டும் தான். வாரந்தோறும் சனிக்கிழமை சிறுவர்மலர் இதழுக்காக காத்திருக்கிறேன். அதில் வரும், அறிவு போட்டி, புள்ளிகளை இணைப்பது, விடுபட்ட எழுத்துகளை கண்டுபிடிப்பது போன்ற பகுதிகளை விரும்பி பூர்த்தி செய்து மகிழ்கிறேன்.குழந்தைகளின் கலைத் திறனை வெளிகொணர்வதில் சிறுவர்மலர் இதழுக்கு இணையாக மற்றொன்று இல்லை. அங்குராசு பக்கத்தில் நுட்பமான விஷயங்கள் ஆச்சர்யம் தருகிறது!என் குடும்ப குழந்தைகளுடன், சிறுவர்மலர் இதழை படிப்பதன் மூலம் நல்ல விஷயங்களை அறிந்து கொள்கிறேன்; அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த புனிதப்பணியை செய்து வரும் ஆசிரியர் குழுவிற்கு வாழ்த்துகள்!- கே.மீனாட்சி கல்யாணசுந்தரம், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !