உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது 88. இல்லத்தரசியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழை நெடுங்காலமாக ஆர்வமாய் படிக்கும் வாசகி. சிறுவருக்கு மட்டுமின்றி பெரியோருக்கும் உகந்த மலராக கோலோச்சுகிறது. மலரும் நினைவுகளை அள்ளித்தரும், 'ஸ்கூல் கேம்பஸ்!' படிக்க சுவாரசியமாக இருக்கிறது. படக்கதையின் ஓவியங்கள் கொள்ளை அழகு. தமாசுகள் அடங்கிய, 'மொக்க ஜோக்ஸ்!' ஆரோக்கிய சிரிப்பை அள்ளித் தருகிறது. புதிர் போட்டி அறிவை வளர்க்கிறது. நாவுக்கு இனிய வித்தியாசமான உணவுகளை, 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!' தருகிறது. இவற்றுடன், 'இளஸ் மனஸ்!' தொடர், சிறுகதை, தெள்ளத்தெளிவான கருத்துள்ள படைப்புகள் அனைத்தும் சிறப்பு. சுட்டிகளின் முகங்களை உள்ளடக்கிய, 'குட்டி குட்டி மலர்கள்!' பற்றி வர்ணிக்க வார்த்தை இல்லை. மொத்தத்தில் சிறுவர்மலர் இதழுக்கு நிகராக, வாசிக்க வேறு எதுவும் இல்லை. சிறுவர் மலர் மேன்மேலும் சிறப்புற வாழ்த்துகள். - ஜலஜா சுப்ரமணியம், விழுப்புரம். தொடர்புக்கு: 78678 39196.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !