நீண்ட நேர முத்தத்துக்கு வைர மோதிரம் பரிசு!
வேடிக்கை, வினோதங்களை நிகழ்த்தி காட்டுவதில், சீனர்களை அடித்து கொள்ள முடியாது. சமீபத்தில், இங்குள்ள ஒரு தனியார் நிறுவனம், காதலர்களுக்காக வித்தியாசமான போட்டியை நடத்தியது. 'காதலர்கள், தங்கள் காதலியை தூக்கி வைத்து, முத்தம் கொடுக்க வேண்டும். யார், நீண்ட நேரம் முத்தம் கொடுக்கின்றனரோ, அவர்களுக்கு வைர மோதிரம் பரிசு' என, அந்த நிறுவனம் கூறியிருந்தது. ஏராளமான காதலர்கள், அந்த நிகழ்ச்சிக்கு குவிந்து விட்டனர். ஒரு சிலர், 'குண்டு' காதலிகளை தூக்க முடியாமல், ஒரு சில நிமிடங்களிலேயே, போட்டியிலிருந்து விலகி விட்டனர். மேலும், சிலருக்கு, காதலிகளை தூக்க முடிந்தாலும், நீண்ட நேரம் முத்தம் கொடுக்க முடியாமல், ஜகா வாங்கி விட்டனர். இறுதியில், ஒரே ஒரு ஜோடி மட்டும், நீண்ட நேரம் தாக்குப் பிடித்து, வைர மோதிர பரிசை தட்டிச் சென்றது. — ஜோல்னாபையன்.