உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

*நா.முத்துலட்சுமி, தேனி: பாரதியார் இன்று உயிரோடு இருந்தால், எப்படி இருக்கும்?ரொம்ப சிரமப்பட்டு தான் வாழ்க்கையை நடத்த வேண் டியதாய் இருக்கும். இப் பல்லாம் கவிதை எழுதி காசு சம்பாதிக்க முடியாது.****ஜே.கவிதா, சிவகாசி: தனியார், 'டிவி' சேனல்கள் வந்த பிறகு, 'தூர்தர்ஷன்' ஓரம் கட்டப்பட்டு விட்டது. இந்நிலையில், நம் நாட்டு வானொலி நிலையங்களின் எதிர் காலம் எப்படி இருக்கும்?'தூர்தர்ஷன்' ஓரம் கட்டப்பட்டு விட்டது என்ற உங்களின் கருத்து முற்றிலும் தவறானது. வானொலிக்கு எந்நாளுமே அழிவில்லை... 'டிவி' பார்க்கும் போது, மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியாது... வானொலி அப்படி அல்லவே... துவைத்துக் கொண்டோ, சமையல் செய்து கொண்டோ, நடந்து கொண்டோ, வானொலி கேட்கலாம். வானொலியின் ரசிக கூட்டம் தன், 'லாயல்டி'யை மாற்றி கொள்ளாது!****ஆர்.சரவணக்குமார், மதுரை: ஆண்களைக் கவர பெண்களுக்கு எத்தனையோ செய்கைகள் இருக்கிறது... பெண்களைக் கவர, ஆண் கள் எம்முறையைக் கையா ளலாம்?வாய் எதுக்கு இருக்கு... அடிச்சு விடும்... 'சுந்தரி... தேவதை... அழகி... அது, இதுன்னு அடிச்சு விட வேண்டியது தானே... பார்ட்டி சிக்கிடுமே! (சொந்த அனுபவம் இல்லை இது; லென்ஸ் மாமா கொடுத்த பதில்)***** டி.ரத்தினம், விழுப்புரம்: இன்ப - துன்பங்கள் பிறக்குமிடம் எது?பையில் வைத்திருக்கும் பர்சில்! அதில், பணம் இருக்கும் வரை இக்கால மனிதன் இன்பமாக, உல்லாசமாக இருக்கிறான்; அதில் உள்ள பணம் குறைய, குறைய துன்பம் அடைகிறான்!****கே.கலியபெருமாள், புதுச்சேரி: வீட்டு வேலைக்கும், வயல் வேலைக்கும் பெண்கள் கிடைப்பது அரிதாகி வருகிறதே...உண்மைதான்... பெண்களிடையே கல்வி அறிவு பெருகி வருவதும், அதிக வருமானம் கிடைக்கக் கூடிய கவுரவமான, அதிக உடல் உழைப்பு தேவைப்படாத மற்ற தொழில்களின் பெருக்கமும்தான் இதற்கு காரணம். '70களில், 100க்கு, 30 என்ற கணக்கில் பெண் தொழிலாளர்கள் இருந்தனர்; இன்றோ, 100க்கு, 15 பேர் தான் பெண் தொழிலாளர்கள்.***** எம்.குருநாதன், கோவை: நம் மக்கள் தான் அரசியல் பேசி, வெட்டிப் பொழுது போக்கிக் கொண்டிருக்கின்றனரா?இல்லை; அமெரிக்கர்களுக்குத்தான் இதில் முதல் இடம். அங்கே, 100க்கு, 37 பேரும், சீனாவில், 21 பேரும், இந்தியாவில், 15 பேரும் இப்படி வெட்டிப் பொழுது போக்குகின்றனர் என்கிறது, 'இன்டர்நேஷனல் ரிசர்ச் அசோ சியேஷன்' என்ற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம்!****எஸ்.சுந்தரமூர்த்தி, ஒத்தக்கால் மண் டபம்: திருமணத்திற்கு பின், ஒரு பெண், தன் முன்னாள் காதலனை சந்திக்க நேரிட்டால்...தன் கணவருக்கு உண்மையான மனைவி யாகி விட்டாள் என்றால், கண்டு கொள்ளாமல் ரோட்டில் பார்க்கும் சாதாரணமான மூன்றாம் மனிதர் போல் சென்றுவிட வேண்டியதுதான்!***** எல்.லட்சுமி நாராயணன், பொன்ன மராவதி: தனித் தமிழில் இனி பேச முடியுமா?முடியவே முடியாது... இப்படி நான் சொல்வதால், தமிழ் வியாபாரிகள் என்னை, 'தமிழ் துரோகி' என்பர்... நான் வருந்தப் போவதில்லை; காரணம், தனித் தமிழ் என்று நான் பிழைப்பு நடத்தவில்லை! பிறமொழிச் சொற்கள் பலவும் தமிழில் கலந்து விட்டது... இதை பேச்சு வழக்கில் இருந்து அகற்றுவது யாராலும் முடியாத செயல்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !