சேவை செய்பவர்கள் எல்லாரும் பைத்தியக்காரர்களா!
நம்மூர் சாலைகளில் நடந்து செல்லும் போது பல இடங்களில் எச்சில் துப்பி, அசிங்கப்படுத்தி இருப்பதை பார்க்கலாம்.எச்சில் துப்புவது தங்கள் பிறப்புரிமை என்பது போல், இச்செயலைக் செய் வோர்களை, சட்டம் போட்டுச் சொல்லியும் திருந்தாதவர்களை என்ன செய்யு முடியும்! ஆனால், சாலைகளில் காணப்படும் எச்சில் மீது மணல் போட்டு மூடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் எர்ணாகுளத்தை சேர்ந்த கிருஷ்ணன் வெண்ணல என்ற முதியவர்.ஒருநாள், அவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, பஸ் பயணி ஒருவர், வெற்றிலை போட்டு துப்பிய எச்சில், இவர் சட்டையை பதம் பார்த்தது. அடுத்த நாள் காலையிலிருந்து, அவர், ஒரு பக்கெட்டில், நோய் தடுப்பு மருந்தை, மணலில் கலந்து, அதை, சாலைகளில் காணப்படும் எச்சில் மீது போட்டு மூடுவதை, வழக்கமாக்கி கொண்டார். கடந்த பத்து ஆண்டுகளாக, இந்த சேவையில் ஈடுபட்டு வரும் கிருஷ்ணனை, பைத்தியக்காரன் என்றே பலர் கேலி செய்கின்றனர்.இப்படி கேலி செய்பவர்களை பார்த்து, சிரித்த முகத்துடன் கிருஷ்ணன் கூறும் பதில், 'நான் பைத்தியக்காரன் என்றால், காந்திஜி, என்னை விட பைத்தியக்காரனாக இருந்தார்...' என்கிறார். யார் கிண்டலடித்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல், தன் சேவையை, தொடருகிறார் இந்த முதியவர்.— ஜோல்னா பையன்.