இந்த ஆண்டின் அழகான பெண்!
அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'பீப்புள்' என்ற பத்திரிகை, இந்த ஆண்டின் உலகின் அழகான பெண்ணாக, 'மில்லியன் டாலர் பேபி' என்ற படத்துக்காக ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற பிரபல ஹாலிவுட் நடிகை சாண்ட்ரா புல்லக்கை தேர்வு செய்துள்ளது.சாண்ட்ரா கூறுகையில், 'அழகு என்பது, ஒருவரின் உருவத்தை பொறுத்தது அல்ல; அவரது உள்ளத்தை பொறுத்தது. மேலோட்டமான அழகு, காலப் போக்கில் மறைந்து விடும். ஆனால், நல்ல மனிதராக இருப்பது தான் காலத்தை கடந்து நிற்கும் உண்மையான அழகு...' என்கிறார். அதெல்லாம் சரி, உலகின் அழகான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ள சாண்ட்ராவின் வயது என்ன தெரியுமா? அதிகம் இல்லை, 50 வயது தான்! — ஜோல்னாபையன்.