உள்ளூர் செய்திகள்

சீட்டுக்கட்டு மன்னன்!

படத்திலுள்ளவர் பெயர் ப்ரெயின் பெர்க். இவருக்கு, சீட்டுக் கட்டுக்களை வைத்து பணம் பார்ப்பது தான் தொழில். நீங்கள் நினைப்பது போல், மூணு சீட்டு, மங்காத்தா போன்ற விளையாட்டுகளை விளையாடி, பணம் சம்பாதிப்பது அல்ல. மாறாக, சீட்டுக்கட்டுகளின் சீட்டுகளை கொண்டு, புகழ் பெற்ற கட்டடங்களின் மாதிரியை உருவாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார். 39 வயதாகும் இவர், இதில் பல சாதனைகளை படைத்துள்ளார்.கடந்த, 2010ம் ஆண்டில், சீனாவிலுள்ள வெனெடியன் மாக்கு ரெசார்ட் ஓட்டலை, அப்படியே அச்சு அசலாக கார்டு மூலம் உருவாக்கினார். இதற்கு, அவருக்கு தேவைப்பட்டது 44 நாட்கள். 2,19,000 கார்டுகளை பயன்படுத்தியுள்ளார். மூன்று மீட்டர் உயரமும், 10 மீட்டர் நீளமும், 272 கிலோ எடையும் கொண்ட இந்த சீட்டுக் கட்டு கட்டடத்தை, வெனெடியன் மாக்கு ரெசார்ட் சைனீஸ் ஓட்டல் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அமைத்துள்ளார்.இது, புதிய உலக சாதனை மட்டுமல்ல. இதன் மூலம், 'கார்டுகளின் மன்னன்' என்ற பட்டமும் இவருக்கு நிலைத்து விட்டது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !