சி.டி., ஸ்கேன் ஆபத்து!
இன்றைய மருத்துவத்தில், சி.டி.ஸ்கேன் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இது, உடலுக்கு தீங்கு ஏற்படுத்துமா என்பது குறித்து, அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு முடிவு, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.கடந்த, 2007ல், அமெரிக்காவில், சி.டி.,ஸ்கேனை பயன்படுத்திய, 29 ஆயிரம் பேருக்கு, புற்றுநோய்க்கான அறிகுறி தென்பட்டதாக தெரிகிறது. ஒருமுறை, சி.டி., ஸ்கேன் எடுப்பது, 442 முறை எக்ஸ்ரே எடுத்துக் கொள்வதற்கு சமம். சி.டி., ஸ்கேன் எடுப்பதன் மூலம், நோயாளியின் உடலில், ரேடியேஷன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், ஸ்கேனிங் மூலம், அமெரிக்காவில், 15 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக, அமெரிக்க தேசிய புற்றுநோய் மருத்துவமனையின், புள்ளி விவரம் காட்டுகிறது. எனவே, ரொம்ப அவசியம் என்றால் மட்டும் ஸ்கேனிங்கை பயன் படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.— ஜோல்னா பையன்.