உள்ளூர் செய்திகள்

யானை வாங்கிக் கொடுத்த, பிரேம் நசீர்!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், சிறயின்கீழு சார்க்கரா தேவி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, ஒரு யானை வாங்க வேண்டும் என்று, முடிவு செய்தனர், கோவில் நிர்வாகிகள். அதற்கான நிதி வசூலை, அன்றைய சூப்பர் ஸ்டாரிடமிருந்து பெற முடிவு செய்து, பிரேம் நசீர் வீட்டுக்கு சென்றனர்.சிறிதும் யோசிக்காமல், 'ஏன் நிதி வசூல்... யானையை நானே வாங்கி தருகிறேன்...' எனக் கூறி, வாங்கியும் கொடுத்து விட்டார், பிரேம் நசீர். அந்த யானை, பல ஆண்டுகளாக கோவிலில் வலம் வந்து கொண்டிருந்ததை, பக்தர்கள் மறக்கவில்லை. இந்து - முஸ்லிம் என்று கோஷம் போடுவோர் உள்ள நிலையில், மலையாள நடிகர், அப்துல் காதர் என்ற பிரேம் நசீர் மறைந்து, 30 ஆண்டுகள் ஆனாலும், அவர் செய்த மனிதாபிமான செயல்களை, இன்றும் மறக்க முடியவில்லை. ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !