உள்ளூர் செய்திகள்

முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை!

கிறிஸ்துமஸ் என்ற சொல், 16ம் நுாற்றாண்டில் தான் உருவானது. அதற்கு முன், 'கர்த்தர் கொண்டாட்டம்' என்று அழைக்கப்பட்டது. தென் கிழக்காசிய நாடான பிலிப்பைன்சில் கிறிஸ்துமஸ் அன்று, அதிகாலை, 4:00 மணிக்கு, ஊரின் முக்கிய சர்ச்சிலிருந்து மணியோசை எழுப்பப்படும். அதைக் கேட்டு அருகிலுள்ள சர்ச் மணியோசை எழுப்பும். இப்படி தொடர் முறையில் மணி ஒலிக்கப்படும். அதன் பின்னரே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பிக்கும்.கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, வாழ்த்து அட்டைகளை அனுப்பும் வழக்கம், லண்டனில் உள்ள விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தின் டைரக்டராக இருந்த, சர் ஹென்றி கோல் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.ஜான் கால்காட் ஹார்ஸ்லே என்ற ஓவியரிடம், 1843ல் வாழ்த்து அட்டைகள் வடிவமைப்பு செய்து தரும்படி கேட்டுக் கொண்டார், கோல்.முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து மடல், மடிப்பு இல்லாத ஒரே அட்டை தான். அதில் மூன்று ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. நடுவிலுள்ள படத்தில், விக்டோரியா காலத்து குடும்பத்தினர், மேஜை முன் நண்பரின் நல்வாழ்வுக்காக மது கோப்பையை உயர்த்தியபடி அமர்ந்திருந்தனர். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !