இதப்படிங்க முதல்ல...
சிறைக்கைதிகளுக்கு சினிமா!தமிழகத்திலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும், கைதிகளுக்காக, நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படங்களை திரையிட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தவறு செய்தவர்கள் திருந்தி வாழ முயற்சி செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இதன் முன்னோட்டமாக, சமீபத்தில், சேலம் சிறைச்சாலையில், 'நண்பன்' படம், கைதிகளுக்காக திரையிடப் பட்டுள்ளது.— சினிமா பொன்னையா.எமியை புகழும் இந்தி ஹீரோ!'மதராசப்பட்டினம்' எமி ஜாக்சன், இப்போது, 'ஏக் தீவானா தா' என்ற, 'விண்ணைத்தாண்டி வருவாயா' இந்தி பட ரீ-மேக்கில் நாயகியாக நடித்துள்ளார். இதில், எமியுடன் நடித்த பிரதீக், 'எமி ஒரு அழகு தேவதை. அவருடன் நடித்தது என் அதிர்ஷ்டம். என் வெட்கத்தையும், கூச்சத்தையும் போக்கியவர்...' என்று, எமி ஜாக்சனை பற்றி புகழ்ந்து தள்ளி வருகிறார். இதைத் தொடர்ந்து, பாலிவுட்டின், மேலும் சில இளவட்ட ஹீரோக்களும் எமியுடன் நடிக்க வேண்டுமென்ற ஆசையில், தங்கள் படங்களில் அவருக்கு சிபாரிசு செய்து வருகின்றனர். இட்டு பேர் பெறு; வெட்டி பேர் பெறு.— எலீசா.கச்சேரியில் பாட ஆண்ட்ரியா விருப்பம்!தற்போது, 'விஸ்வரூபம்' மற்றும் 'இரண்டாம் உலகம்' என்று, சினிமாவில் பிசியாக நடித்து வந்த போதும், மேடை கச்சேரிகளில் பாடுவதை நிறுத்தவில்லை ஆண்ட்ரியா. மாதம் இரண்டு கச்சேரிகளிலாவது பாடி வருகிறார். 'என்னைப் பொறுத்தவரை, சினிமாவில் நடிப்பதை விட, மேடைகளில் பாடுவதில் தான் அதிக சந்தோஷம் கிடைக்கிறது. அதோடு பாடி புகழ் பெறுவதையே நான் விரும்புகிறேன்...' என்கிறார். ஆசை உள்ளவரை அலைச்சலும் உண்டு.— எலீசா.வில்லனாக நடிக்க மறுக்கும் நந்தா!'வேலூர் மாவட்டம்' படத்துக்கு பின், 'வந்தான் வென்றான்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார் நந்தா. ஆனால், அந்த படம் வெற்றி பெறாததோடு, படம் பார்த்த பலரும், 'உங்களுக்கு வில்லன் வேடம் செட்டாகவில்லை...' என்று சொல்லி விட்டனர். அதனால், இனி வில்லன் வேடத்தில் நடிக்கப் போவதில்லை என்ற முடிவில் இருக்கும் நந்தா, தற்போது, 'சிருங்காரம்' படத்தை தானே இயக்கியும், தேசிய விருது பெற்ற சாரதா ராமநாதன் இயக்கும், 'திருப்பம்' படத்தில் நடித்தும் வருகிறார். 'முதன்முறையாக, நான் இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படம், என் திரை வாழ்வில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும்...' என்றும் அடித்துச் சொல்கிறார்.—சி.பொ.,தமிழுக்கு வருகிறார் நமீதா!'இளைஞன்' படத்தில் வில்லி வேடத்தில் நடித்து, தன் செகண்ட் இன்னிங்சை தொடங்கிய நமீதாவுக்கு, எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. அதனால், கன்னடத்துக்கு சென்று விட்ட அவரை, 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' படத்தை இயக்கிய ராஜ்கிருஷ்ணா, அடுத்து தான் இயக்கும், 'அச்சமென்ன' படத்தின் நாயகியாக்கி உள்ளார். இப்படத்தில், பெண்கள், பிரச்னைகளைக் கண்டு பயந்து விடக்கூடாது. எதிர்நீச்சல் போட்டு, எதிர்ப்புகளை முறியடிக்க வேண்டும். என்றொரு அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒன்று செய்தாலும் உருப்படியாக செய்ய வேண்டும்!— எலீசா.கவர்ச்சி உடையில் ஸ்ரீதேவி! ஒரு காலத்தில், தன் தொடை கவர்ச்சியை காட்டியே, கோலிவுட் மற்றும் பாலிவுட் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் நடிகை ஸ்ரீதேவி. அதே பழக்கத்தில், அவர் இப்போதும், இந்திப்பட விழாக்களுக்கு உடையணிந்து வருகிறார். இதை மும்பையிலுள்ள ஒரு பெண்கள் அமைப்பு தொடர்ந்து எதிர்த்து வந்ததோடு, ஸ்ரீதேவி சமீபத்தில் கவர்ச்சி உடை தரித்து ஒரு விழாவுக்கு வந்தபோது, மறியல் போராட்டம் நடத்தி விட்டது. இதனால், அவமானத்தில் அந்த விழாவில் கலந்து கொள்ளாமலே வீட்டிற்கு திரும்பி விட்டார்.— சினிமா பொன்னையா.அவ்ளோதான்!