உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

முதலிடம் பிடித்த ஜெயம் ரவி!இந்த ஆண்டில், இதுவரை வெளியான படங்களிலேயே ஜெயம் ரவி நடித்த, தனி ஒருவன் படம் தான், 75 கோடி ரூபாய் வசூலித்து, அதிகப்படியான லாபத்தை கொடுத்துள்ளது. அதேபோல், அவர் நடித்த, ரோமியோ ஜூலியட் படமும், 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.ஆனால், அஜித் நடித்த, என்னை அறிந்தால், விஜய் நடித்த புலி, தனுஷின், மாரி மற்றும் சிவகார்த்திகேயனின், காக்கி சட்டை என, எந்த முன்னணி கதாநாயகர்களின் படங்களும், எதிர்பார்த்த வசூலை தரவில்லை. அதனால், இந்த ஆண்டில், தயாரிப்பாளருக்கு, அதிக வசூலை சம்பாதித்து கொடுத்த நடிகராக, முதலிடம் பிடித்துள்ளார் ஜெயம் ரவி.— சினிமா பொன்னையாஷங்கரை மிரட்டிய அர்னால்டு!ரஜினியை நாயகனாக வைத்து, எந்திரன்2 படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கிவிட்ட இயக்குனர் ஷங்கருக்கு, இன்னும், அப்படத்தில் நடிக்க வில்லன் நடிகர் செட்டாகவில்லை. பாலிவுட் நடிகர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தார்; வில்லன் வேடம் என்றதும் நழுவிக் கொண்டனர். இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் அர்னால்டை வில்லனாக நடிக்க வைக்க, சமீபத்தில் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் ஷங்கர். அப்போது, 'நான் நடிக்க வேண்டுமென்றால், 100 கோடி ரூபாய், சம்பளம் தர வேண்டும்...' என்று சொல்லி ஷங்கரை தலைசுற்ற வைத்து விட்டார் அர்னால்டு. அதையடுத்து, 'தயாரிப்பாளரிடம் பேசிவிட்டு, தொடர்பு கொள்கிறேன்...' என்று இந்தியா திரும்பிய பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், அர்னால்டு கொடுத்த அதிர்ச்சியில் இருந்து, இன்னும் மீளாமலேயே இருக்கிறார்.- சி.பொ.,இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐஸ்வர்யா ராய்!திருமணத்திற்கு பின், பல ஆண்டுகளாக, கேமரா முன்பு வராமல் இருந்த ஐஸ்வர்யா ராய், தற்போது, ஜஸ்பா என்ற இந்தி படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான போது, இளவட்ட ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அதில் ஐஸ்வர்யா ராய், கவர்ச்சி உடையில் உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, தன் பழைய மார்க்கெட்டை பிடிக்கும் நோக்கத்தில், அப்படத்திற்கான பிரமோஷன் பாடல் ஒன்றையும் சொந்தக்குரலில் பாட தயாராகி வருகிறார். கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்!— எலீசாசிரஞ்சீவிக்கு எதிர்ப்பு!கத்தி படத்தின் கதைக்கு எதிராக, தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், அப்படத்தை தெலுங்கில், ரீ மேக் செய்யும் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. அதனால், 'வழக்கு நடைபெறும் நேரத்தில், அப்படத்தை வேறு மொழியில், ரீ மேக் செய்வது, சட்டப்படி தவறு...' என்று அப்படத்தில் நடிக்க இருந்த நடிகர் சிரஞ்சீவிக்கு வழக்கு தொடர்ந்தவர்கள் சார்பில், நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. அதனால், கத்தி ரீ மேக்கில், விஜய் நடித்த வேடத்தில் நடிக்கயிருந்த சிரஞ்சீவி, படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளார்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!பெல் இயக்குனரின் படத்தில் நடிப்பதற்கு, நடிகர்கள் போட்டி போட்ட காலம் போய், அவரது புதிய படத்தில் நடிக்க, தற்போது, எந்த முன்னணி கதாநாயகர்களும் முன் வரவில்லை. இதற்கு, அவர் மீது அவநம்பிக்கை ஏற்பட்டிருப்பதோடு, அவரது படங்களில் கொடுக்கப்படும் குறைவான சம்பளமே காரணம் என்கின்றனர். இதனால், மனமுடைந்து போன மணியானவர், கோலிவுட் கதாநாயகர்கள் மீது, செம கோபத்தில் உள்ளார்.இனிமையான அந்த நடிகைக்கு, கதாநாயகி வாய்ப்பு கொடுக்க ஆளில்லை. கவர்ச்சியாக நடிப்பதற்கு அம்மணி தயாரான பின்பும் கூட, யாரும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இதனால், 'நானாவது இறங்கி சென்று வாய்ப்பு கேட்பதாவது?' என்று ஏகத்துக்கு பேசிக் கொண்டிருந்த நடிகை, இப்போது, சில நரைமுடி தயாரிப்பாளர்களின் அந்தப்புரத்துக்கு, 'விசிட்' அடித்து, படவேட்டை நடத்த துவங்கியுள்ளார்.சினி துளிகள்!* ஓ காதல் கண்மணி படத்தை தொடர்ந்து, ஒரு காதல் கதையை படமாக்குகிறார் மணிரத்னம்.* வாகை சூடவா பட நாயகி இனியா, சிங்கப்பூர் மற்றும் மலேஷியா நாடுகளுக்கு சென்று, நடன நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.* பண மோசடி செய்வதாக, தன் மேனேஜர்களை அடிக்கடி மாற்றி கொண்டிருக்கிறார் ஜஸ்வர்யா ராஜேஷ்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !