இதப்படிங்க முதல்ல...
ரஜினிக்கு ஏற்பட்ட திடீர் ஆசை!தர்பார் படத்தில் நடித்து வரும், ரஜினிக்கு, தன் மூத்த மருமகன், தனுஷுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது, நீண்ட நாள் ஆசையாக இருந்தது. இந்நிலையில், தற்போது, இரண்டாவது மருமகன், விசாகனுடனும் இணைந்து நடிக்க ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த இரண்டு ஆசைகளையும் ஒரே படத்தில் நிறைவேற்றிக் கொள்ள, தர்பார் படத்துக்கு பிறகு, தான் நடிக்கும் படத்தில், மருமகன்களான, தனுஷ், விசாகன் இருவரையும் நடிக்க வைக்க திட்டமிட்டு உள்ளார். மேலும், ரஜினியின் இளைய மருமகன் விசாகன், வஞ்சகர் உலகம் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.— சினிமா பொன்னையா'ரொமான்சு'க்கு தடை போடாத,ரம்யா நம்பீசன்!ஆரம்பத்தில் இருந்தே கவர்ச்சிக்கு தடை போட்டு வரும், ரம்யா நம்பீசன், 'ரொமான்ஸ்' காட்சிகளுக்கு எந்த தடையும் போடுவதில்லை. அந்த வகையில், தற்போது, விஜய் ஆண்டனியுடன், தமிழரசன் படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, படுக்கையறை காட்சிகளில் பின்னி பிணைந்து விளையாடி இருக்கிறார். அதோடு, நடிகையருடன் நெருக்கமாக நடிக்க தயங்கும், விஜய் ஆண்டனியை கூட, தன் இறுக்கமான, நெருக்கமான பிடிக்குள் சிறை பிடித்து, அவரையும், 'ரொமான்சில்' புகுந்து விளையாட வைத்து விட்டாராம்.— எலீசாகோலிவுட்டில் அனுபமா!தனுஷுடன், கொடி படத்தில் நடித்தவர், மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்ததால், ஐதராபாத்திலேயே முகாமிட்டிருந்தார். ஆனால், அவர் நடித்த படங்கள் தோல்வியடைந்ததால், அவரை திருப்பி அனுப்பி விட்டனர். இதனால், கோலிவுட்டுக்கு வந்து, மலையாள நடிகைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இயக்குனர்களின் அலுவலக கதவை தட்டி வருகிறார். அதோடு, 'கொடி படத்தில், கவர்ச்சி கொடியேற்ற போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு வாய்ப்பு கொடுத்தால், மார்க்கெட்டில் உள்ள கவர்ச்சி நடிகைகள் மிரண்டு ஓடும் அளவுக்கு கவர்ச்சி சாகசக்காரி ஆவேன்...' என்று, இயக்குனர்களிடம் உறுதி கூறி, பட வேட்டையில் ஈடுபட்டுள்ளார். — எலீசாவிக்ரம் கொடுக்கும் பயிற்சி!மகன், துருவ் விக்ரம் நாயகனாக நடித்து வரும், ஆதித்ய வர்மா படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு, விக்ரம் வருவதே இல்லை. அதே சமயம், மகனின் நடிப்பு, முதல் படத்திலேயே பேசப்பட வேண்டும் என்பதற்காக, முன்கூட்டியே, வசனங்களை வாங்கி, அதற்கு தேவையான நடிப்பு பயிற்சியை கொடுத்தே, படப்பிடிப்பு தளத்துக்கு அனுப்புகிறார், விக்ரம். இதனால், புதுமுக நடிகர் என்ற போதும், 'மெகா சீன்'களை கூட, 'சிங்கிள் டேக்'கில் நடித்து, அசத்தி வருகிறார், வாரிசு நடிகர்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!* இயக்குனர்களின் பணிகளில் குறுக்கீடு செய்து, கெட்ட பெயரை எடுத்த, வம்பு நடிகர் மீது, தொடர்ந்து புகார் எழுந்ததால், சில காலம் வாலை சுருட்டி வைத்திருந்தார். இப்போது, மறுபடியும் அவர் வேலையை காட்டுவதாக, புலம்புகின்றனர், இயக்குனர்கள். குறிப்பாக,காட்சி தாள்களை வாங்கிப் பார்த்து, அதில், இயக்குனர் சொல்வது போன்று நடிக்காமல், தனக்கு தோன்றுவதை நடிக்கிறார். இதனால், வம்பு மீது, கோலிவுட்டில் மறுபடியும் அதிருப்தி நிலவத் துவங்கியிருக்கிறது.'ஏம்பா... நாங்க இரண்டு பேர், சீரியசா பேசிட்டு இருக்கிறோமே... நீ எதுக்கு, சிம்பு மாதிரி இடை இடையே கருத்து சொல்லிட்டிருக்கே...' என்று கடிந்து கொண்டார், தலைவர்.* மணியானவரின் கனவு படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, தாரா நடிகையிடம் பேசினர். ஆனால், அவரோ, அந்த படத்தில் நடிக்கும் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் கேட்டதால், அதிர்ந்து விட்டார், மணியானவர். பேச்சு இழுபறியில் இருந்தபோது, இந்த சேதி, இஞ்சி இடுப்பழகி நடிகையின் காதுகளை எட்டியது. விளைவு, மின்னல் வேகத்தில் சென்னை வந்து, 'பாக்கெட் மணி கொடுத்தாலும் போதும், நான் நடிக்கிறேன். உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்பது, என் கனவு...' என்று சொல்லி, வலுக்கட்டாயமாக, மணியானவரின் படத்தில் தன்னை திணித்துக் கொண்டார். 'சம்பள பிரச்னை முடிவுக்கு வருவதற்குள், இந்த நடிகை, குறுக்கு சால் ஓட்டி, ஆட்டத்தை கலைத்து விட்டாரே...' என்று, இஞ்சி இடுப்பழகி மீது, கொல வெறியில் இருக்கிறார், தாரா நடிகை.'இதப்பாருடி... இப்ப, உனக்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு... வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டு, முன்னுக்கு வர பார்க்கணும். நயன்தாரா மாதிரி ரொம்பவும் யோசிக்காதே... அப்புறம், அனுஷ்கா மாதிரி யாராவது குறுக்கே புகுந்து, உன் வேலைக்கு, 'ஆப்பு' வைத்து விட போறாங்க...' என்று எச்சரித்தாள், தோழி.சினி துளிகள்!* மாநாடு படத்தை அடுத்து, சிம்பு நடிக்கும் ஒரு படத்தில், கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கிறார்.* அனுஷ்கா நடித்து வரும், சைலன்ஸ் படத்தை, ஹேமந்த் மதுக்கர் இயக்குகிறார்.அவ்ளோதான்!