இதப்படிங்க முதல்ல...
இசைஞானியாகும், தனுஷ்!அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு கதைகள், படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து விட்ட, இசைஞானி இளையராஜாவின், வாழ்க்கை வரலாறு படத்தை, அவரது இளைய மகனும், இசையமைப்பாளருமான, யுவன் சங்கர்ராஜா இயக்கப் போகிறார். அந்த படத்திற்கு, ராஜா தி ஜர்னி என்று, தலைப்பு வைத்திருப்பதாக சொல்லும், யுவன், இளையராஜா வேடத்தில், தனுஷை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்.— சினிமா பொன்னையாஇந்தியன்- - 2, 'ஸ்கூப்'பை உடைத்த, காஜல்!காஜல்அகர்வாலின் மார்க்கெட் சரிந்து விட்டதாக, சிலர் செய்தி வெளியிட்டதை அடுத்து, கொந்தளித்து விட்டார். அதையடுத்து, ஒரு பேட்டியில், 'இந்தியன் - 2 படத்தில், நான், 85 வயது பாட்டியாக நடிக்கிறேன். அதுவும், கமலுக்கே, 'கெத்து' காட்டும், 'வெயிட்' ஆன, கதாபாத்திரம். இந்த படம் வந்த பின், இந்திய சினிமாவே, என்னை திரும்பிப் பார்க்கும்...' என்று உணர்ச்சிவசப்பட்டு, படத்தின், 'ஸ்கூப்'பையே உடைத்து விட்டார். இதனால், கமலும், இயக்குனர் ஷங்கரும் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடுக்கத் தெரியாவிட்டாலும், கெடுக்கத் தெரியாதா!— எலீசாசமந்தாவின் கனவை நனவாக்கும், கணவர்!'இந்தியாவில், என்னை அதிகமாக கவர்ந்த இடம், கோவா...' என்று சொல்லி வரும், சமந்தாவிற்கு, கோவாவில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது, நீண்ட நாள் கனவாம். அதை, தன் காதல் கணவரான, நாக சைதன்யாவிடம் சொன்னதை அடுத்து, இப்போது, சமந்தாவின் விருப்பப்படியே, கோவாவில், ஒரு பங்களா கட்டி வருகிறார். இனி, படப்பிடிப்பு இல்லையென்றால், கணவருடன், கோவாவில், 'ஜாலி'யாக, 'என்ஜாய்' பண்ணப் போவதாக கூறுகிறார்.— எலீசாபரபரப்பை ஏற்படுத்திய, விஜய் ரசிகர்கள்!விஜயின், தென் சென்னை மாவட்ட ரசிகர்கள், 'சி.எம்., ஆப் தமிழ்நாடு' -என்று குறிப்பிட்டு, ஒரு, 'போஸ்டரை' வெளியிட்டுள்ளனர். அதோடு, 'கலெக் ஷன் மாஸ்டர் என்பதையே இப்படி குறிப்பிட்டிருக்கிறோம்...' என்றும், விளக்கம் கொடுத்துள்ளனர். என்றாலும், 'சி.எம்., ஆப் தமிழ்நாடு' என்று, ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் இருப்பது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!உச்ச நடிகருடன் நடித்து வரும், பிரபல பூ நடிகை, நடித்தபடியே, தான் இடம்பெற்றிருக்கும் தேசிய கட்சியுடன் அவரை கூட்டணி அமைக்க வைக்கும் முயற்சியிலும் ஈடுபடு்கிறார். இதனால், தான் இடம்பெற்றுள்ள கட்சியின் முக்கிய தலைவர்களை படப்பிடிப்பு தளத்திற்கு வரவைத்து, உச்ச நடிகருடன் பேச்சு நடத்தவும் செய்கிறார். இந்த படத்தில், நடிக்கிற வேலையை விட, அரசியல் வேலையைத்தான் நடிகை அதிகமாக செய்து கொண்டிருப்பதாக, படப்பிடிப்பு தளத்தில் கிசுகிசுக்கின்றனர்.'வேலை கிடைப்பதே குதிரை கொம்பா இருக்கிறது. இந்நிலையில், முன் அனுபவம் உள்ளதால், கொடுத்த வேலையை சிறப்பாக செய்வாங்கன்னு நம்பி, குஷ்புக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார், முதலாளி. அதை சரியா பயன்படுத்திக்காம, வீண் வம்பு பேசிக்கிட்டு, எல்லாரையும், 'டென்ஷன்' படுத்திட்டு இருக்காங்க...' என்று புலம்பினார், மேனேஜர்.சினி துளிகள்!* கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், ரஜினி நடிக்கும் படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.* ரஜினியுடன், 168வது படத்தில் நடித்து வரும், குஷ்பு, தன் கணவர், சுந்தர்.சி இயக்கும் புதிய படத்திலும், முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார்.அவ்ளோதான்!