உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

'அட்வான்சை' திருப்பிக் கொடுத்த, விக்ரம்!அந்நியன், கந்தசாமி படங்களுக்கு பிறகு, விக்ரம் நடித்த, 12 படங்கள், அதிர்ச்சி தோல்வியாக அமைந்தன. இருப்பினும், கடைசியாக நடித்த, பொன்னியின் செல்வன் படம், அவருக்கு கை கொடுத்திருப்பதோடு, பா.ரஞ்சித் இயக்கும், தங்கலான் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.'இனிமேல், ஆண்டுக்கு ஒரு படம் என்றாலும், மெகா இயக்குனர்களின் படங்களில் நடித்து, 'ஹிட்' கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.'சில, இளவட்ட இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு, கதை கேட்டு, 'அட்வான்ஸ்' வாங்கி இருந்தேன். இப்போது அவற்றை திருப்பி கொடுத்து விட்டேன். அதோடு, 'ஹிட்' படங்களை கொடுத்து வரும், இளவட்ட இயக்குனர்களுக்கும், அழைப்பு விடுத்துள்ளேன்...' என்கிறார், விக்ரம்.சினிமா பொன்னையா'ஓவர்டேக்' செய்யும், அமலாபால்!சமீபகாலமாக, நயன்தாரா, சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பல தென்னிந்திய நடிகையரின் கவனம், பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. இதையடுத்து, அமலாபாலும் தற்போது, பாலிவுட் சினிமாவில் முகாமிட்டிருக்கிறார்.'தமிழ், தெலுங்கில் எனக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லாததால், பாலிவுட்டில் கொடிநாட்டி விட்டு, மீண்டும் தென்னிந்தியாவில் புயலாக, 'என்ட்ரி' கொடுப்பேன். ஏற்கனவே தமிழில், ஆடை படத்தில், ஆடையே அணியாமல் நடித்துள்ளேன்.'பாலிவுட் சினிமாவில், 'டூ பீஸ்' நடிகையாக உருவெடுத்து, அங்குள்ள கவர்ச்சி புயல்களை எல்லாம் ஓரங்கட்ட, புதிய சபதம் எடுத்திருக்கிறேன். அதோடு, எனக்கு முக்கிய கதாநாயகி வேடம் கிடைப்பது கடினம் என்பதால், குத்தாட்ட கோதாவில் குதித்துள்ளேன்...' என்கிறார், அமலாபால்.— எலீசாவடிவேலு கொடுத்த நெத்தியடி!'வடிவேலுவின், திமிரு இன்னும் அடங்கவில்லை...' என்று, கோலிவுட்டில் பரவலாக ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு அவர் பதில் அளிக்கையில், 'என்னிடம் நிறைய இயக்குனர்கள், கதை சொல்ல வருகின்றனர். அவர்கள் சொல்லும் கதை பிடிக்கவில்லை என்றால், உடனடியாக, நடிக்க மறுத்து விடுகிறேன்.'அதன் காரணமாகவே, 'என்னை தேடி வந்து, கதை சொன்னால், கதையை குறை சொல்கிறார்; நடிக்க மாட்டேன் என்கிறார். இவருக்கு திமிரு அதிகமாகி விட்டது...' என்று, சிலர் திட்டமிட்டு, என்னைப் பற்றி, அவதுாறு பரப்புகின்றனர். 'சரியான கதையை சொல்லி, என்னை திருப்திபடுத்த முடியாதவர்கள், தங்களது குறைகளை மறைப்பதற்காக, இதுபோன்ற அவதுாறுகளை பரப்பித் திரிகின்றனர்...' என்கிறார், வடிவேலு.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!* ஒரு காலத்தில், சினிமாவில் மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதற்காக, சில இரண்டாம் தட்டு, 'ஹீரோ'களை தன் அன்புப் பிடிக்குள் சிறை பிடித்து வைத்திருந்தார், காக்கா முட்டை நடிகை. ஆனால், இப்போது மேற்படி, 'ஹீரோ'கள் தன்னை கழட்டி விட்டதால், நடிகையருக்கு முக்கியத்துவம் கொடுத்து, படம் எடுக்கும் இயக்குனர்களை வளைத்துப் போட்டு வருகிறார், அம்மணி.அந்த வகையில், தற்போது, காக்கா முட்டையின் அன்புப் பிடிக்குள் சில இளவட்ட இயக்குனர்கள், 'அடிக்ட்' ஆகி கிடப்பதாக, கோலிவுட்டில், 'கிசுகிசு'க்கின்றனர்.* மெரினா நடிகரிடம், எந்த இயக்குனர்கள் கதை சொன்னாலும் மொத்த கதையையும் கேட்டுவிட்டு ஏகப்பட்ட திருத்தங்களை செய்கிறார். குறிப்பாக, 'நான் தோன்றும், 'ஓப்பனிங்' காட்சியில், ரஜினி-, விஜய், 'ஓப்பனிங்' காட்சி போன்று, மிரட்டலாக இருக்க வேண்டும். பாடல் மற்றும் சண்டை காட்சிகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டும்...' என்று, இவரே பட்ஜெட்டை நிர்ணயிக்கிறார்.அதோடு, யாராவது பிரபலமில்லாத வில்லன் நடிகர்களின் பெயரைச் சொன்னால், 'என், 'ரேஞ்சு'க்கு பாலிவுட்டின் வில்லன்களை போடுங்கள்...' என்று, ஏகத்துக்கு பேசுகிறார். இப்படி தங்களுக்கே, 'ஆர்டர்' போடுவதால், சில மெகா புரடியூசர்கள், மெரினா நடிகர் மீது, செம கடுப்பில் இருக்கின்றனர்.சினி துளிகள்!* சாணிக்காயுதம் படத்தை அடுத்து, ரகு தாத்தா என்ற படத்தில், மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கிறார், கீர்த்தி சுரேஷ். இந்த படம், நான்கு மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது.* தெலுங்கில், 'என்ட்ரி' கொடுத்த முதல் படமான, பிரின்ஸ் படுதோல்வி அடைந்து விட்டதால், 'இனிமேல் டோலிவுட் வேண்டாம்...' என்று, முடிவெடுத்து விட்டார், சிவகார்த்திகேயன்.* குடும்ப நடிகை என்ற, 'இமேஜ்' தன்னை ஒட்டிக் கொண்டுள்ள நிலையில், 'ஹீரோயினிகளுக்கு இணையாக என்னாலும், 'கிளாமர்' ஆக நடிக்க முடியும்...' என்று சொல்லி, பாடல் காட்சிகளில், தன்னை, 'கிளாமர்' ஆக வெளிப்படுத்துமாறு, இயக்குனர்களை கேட்டுள்ளார், ஐஸ்வர்யா ராஜேஷ்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !