உள்ளூர் செய்திகள்

விற்பனைக்கு பயன்படும் பிரமாண்ட எலெக்ட்ரிக் கார்!

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள பிரபலமான ஷூ நிறுவனம், தங்களால் தயாரிக்கப்படும் ஷூக்களின் விற்பனையை அதிகரிக்கச் செய்வதற்காக, புதுமையான விளம்பர தந்திரத்தை கையாளுகிறது.ஷூ வடிவத்திலேயே பிரமாண்டமான, எலெக்ட்ரிக் காரை தயாரித்துள்ளது. இதன் விலை, 3.2 லட்சம். இரண்டு பேர், இந்த காரில் பயணம் செய்ய முடியும். ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்வதன் மூலம், இந்த காரில் அதிகபட்சமாக, 250 கி.மீ., வரை பயணிக்க முடியும். மணிக்கு, 30 கி.மீ., வேகத்தில் செல்லலாம்.இந்த பிரமாண்ட எலெக்ட்ரிக் ஷூ காரின் நீளம், பத்து அடி. உயரம், மூன்று அடி. இந்த காரின் அதிகபட்ச பாகங்கள், ஷூ தயாரிக்க பயன்படுத்தும் லெதர் பொருட்களை கொண்டு தான், தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த அதிசய கார், ரோட்டில் செல்லும்போது, அந்த வழியாக செல்லும் அனைவரையும் கண்டிப்பாக, திரும்பி பார்க்க வைக்கிறது. இதனால், அந்த ஷூ நிறுவனத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்கிறது.'இப்போது, ஒரு காரைத் தான் தயாரித்துள்ளோம். இதற்கு நல்ல பயன் கிடைத்துள்ளதால், இதுபோல், இன்னும், 40 கார்களை தயாரித்து, சீனா முழுவதும் உலா வர வைப்போம். அப்புறம் பாருங்கள், எங்கள் நிறுவனத்தின் ஷூக்கள் விற்பனை, பிய்த்துக் கொண்டு போகும்...' என்கின்றனர், சம்பந்தப்பட்ட ஷூ தயாரிப்பு நிறுவனத்தினர்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !