உள்ளூர் செய்திகள்

மதுவால் நேர்ந்த கொடுமை!

'குடி குடியைக் கெடுக்கும்...' என்பதற்கு, தென்கிழக்காசிய நாடான, மலேஷியாவை சேர்ந்த, மேனகா வாழ்க்கையே உதாரணமாகி விட்டது. குடிகார கணவனின் பொறுப்பற்ற வாழ்க்கையால், தன் மூன்று குழந்தைகளை காப்பாற்ற, சிங்கப்பூருக்கு சென்று, வீட்டு வேலை செய்து வந்தார், மேனகா. ஐந்து ஆண்டுகளுக்கு முன், விடுமுறையில் வீடு திரும்பிய, மேனகா மீது, வீச்சரிவாளுடன் பாய்ந்த கணவர், கண்மூடித்தனமாக தாக்கியதில், இரண்டு கால்கள், இரண்டு கைகளும் பலத்த காயமடைந்து, துண்டிக்கப்பட்டன. போதை கணவர், வீட்டுக்குள் ஓடி, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரளாவில் உள்ள மருத்துவமனையில், இழந்த உறுப்புகள், பொருத்தப்படுவதாக கேள்விப்பட்டு, சக்கர நாற்காலியில், மேனகாவை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளான், அவரது மகன், அரவிந்த்.- ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !