உள்ளூர் செய்திகள்

வந்து விட்டது, ஹெலி டூரிசம்!

கர்நாடக மாநிலம், உடுப்பியில், 'ஹெலி டூரிசம்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, ஏராளமான கோவில்கள் இருக்கின்றன. கோவில் தரிசனத்திற்காக அதிக நேரத்தை, சுற்றுலா பயணியர் செலவழிக்க வேண்டி உள்ளதால், ஹெலிகாப்டர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது, இங்குள்ள சுற்றுலா துறை. வாரம் மூன்று நாட்களில், 'ஹெலி டூரிசம்' நடக்கும். குந்தாபுரத்திலிருந்து புறப்பட்டு, உடுப்பி, செயின் மேரீஸ், ஹீட் பீச், மல்பே பிவுரிஸ் போர்ட் மற்றும் மணிபால் வழியாக திரும்பி விடுகிறது. பயணக் கட்டணம், ஒருவருக்கு, 3,000 ரூபாய். — ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !