ஆறு லட்சம் ரூபாய் வேண்டுமா?
அமெரிக்காவின் அலபாமா நகரைச் சேர்ந்த, ரென் லு யு என்ற, 29 வயது இளைஞருக்கு, தோழிகள் என்றால் அத்தனை பிரியம். அழகழகான தோழிப் பெண்களுடன் ஊர் சுற்றுவது தான், இவரின் பொழுதுபோக்கு. ஆனால், எந்த பெண்ணுடனும், ஆறு மாதத்துக்கு மேல் நட்பை தொடர மாட்டார். இதனால், இப்போது, ஊர் சுற்றுவதற்கு தகுந்த தோழிகள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்.தனக்கு பொருத்தமான தோழிகளை ஏற்பாடு செய்து தருவோருக்கு அல்லது அறிமுகம் செய்து வைப்போருக்கு, ஆறு லட்சம் ரூபாய் சன்மானம் தருவதாக, பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டுள்ளார்.— ஜோல்னாபையன்.