கச்சபீ வீணை!
சரஸ்வதியை கலைமகள், சாரதாதேவி, பாரதி, ஹம்சவாஹினி, வானீஸ்வரி மற்றும் புத்திதாத்ரீ என்று பல பெயர்களில் வழிபடுவர். சரஸ்வதி தேவியின் கைகளில் தவழும் வீணைக்கு, 'கச்சபீ' என்று பெயர். இந்த கச்சபீ வீணை, சிவபெருமானால் பிரம்மனுக்கு அளிக்கப்பட்டது; அதை, தன் தேவியான சரஸ்வதிக்கு அளித்தார் பிரம்மன். அந்த வீணையை தான், தன் கரங்களில் ஏந்தியுள்ளாள், சரஸ்வதி.பொதுவாக, சரஸ்வதிக்கு நான்கு கரங்கள் உள்ளதை காண்கிறோம். எட்டு கைகள் கொண்ட சரஸ்வதியை, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலும், கச்சபேஸ்வரர் ஆலயத்திலும் காணலாம்.