கும்பகர்ணி!
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவைச் சேர்ந்த இளம் பெண், எச்சா, 17. இவர், அதீத துாக்கம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு இயல்பாக இருக்கும் இவர், திடீரென, ஒரு சில நாட்கள் தொடர்ந்து துாங்குவார். என்ன செய்தாலும், இவரை எழுப்ப முடியாது. சில நேரங்களில், அதிகபட்சமாக, 7 நாட்கள், 13 நாட்கள் என, தொடர்ந்து துாங்குவார். துாக்கத்திலேயே, இவருக்கு பெற்றோர் திரவ உணவை கொடுக்கின்றனர். இவரை பரிசோதித்த டாக்டர்கள், 'ஹைபர்சோம்னியா என்ற நோயால், இந்த பெண் பாதிக்கப்பட்டுள்ளார். நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பிரச்னையால், இந்த நோய் ஏற்படுகிறது. தொடர் சிகிச்சைகளால், இந்த நோயை குணப்படுத்த முடியும்...' என்கின்றனர். — ஜோல்னாபையன்