எலுமிச்சம் பழம்!
மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சம் பழம், கோடைகாலத்தில் ஏற்படும் உடல் உஷ்ண நோய்களை தடுக்கிறது.* வெல்லம் கரைத்த நீரில், சுக்கைத் தட்டிப் போட்டு, எலுமிச்சை சாறு கலந்து அருந்துங்கள், கோடை வெயிலுக்கு நல்லது.* வெட்டிவேர் போட்ட நீரை வடிகட்டி, ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து, தர்பூசணி பழத் துண்டுகளை சேர்த்து அருந்தினால், உடல் உஷ்ணம் குறையும்.* கோடையில் ஏற்படும் நீர் கடுப்பு குறைய, எலுமிச்சை சாறில், நல்லெண்ணெய் கலந்து குடிக்க குணமாகும்.* எலுமிச்சை சாறு, பித்தத்தை குறைக்கும்.* சோற்றுக் கற்றாழையுடன், எலுமிச்சை சாறு கலந்து குளித்தால், சரும பிரச்னை தீரும். குளிக்கும் நீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்துக் குளித்தாலும் சரும நோய் அண்டாது.* தினமும் இரு வேளை லெமன் டீ குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம்.* பிளாக் டீயில், சிறிது எலுமிச்சை சாறு கலந்து பருகினால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு ஏற்படும்.