உள்ளூர் செய்திகள்

காதலனின் ஆசையை இப்படியும் நிறைவேற்றலாம்!

ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்தவர், ஸ்டெபானி கிளாசியோ, 31. இவர், தன் காதலனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, 10 ஆண்டுகளாக, கூந்தலை வெட்டாமல், நீளமாக வளர்த்து வருகிறார். தற்போது, இவரது கூந்தல், 5 அடி உயரம் உள்ளது.ஆனால், கூந்தலை, 6.5 அடி உயரம் வரை வளர்க்க வேண்டும் என்பது, இவரது காதலனின் ஆசையாம். இதனால், பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டாலும், தொடர்ந்து கூந்தலை, கண்ணும் கருத்துமாக பராமரித்து, வளர்த்து வருகிறார். 'காதலனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தான், கூந்தலை வளர்த்தேன். ஆனால், இப்போது உலகம் முழுதும் பிரபலமாகி விட்டேன். இதனால், தொடர்ந்து கூந்தலை வளர்க்க முடிவெடுத்துள்ளேன்...' என்கிறார், ஸ்டெபானி. ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !