உள்ளூர் செய்திகள்

ஒரே ஒரு இளைஞருக்காக திறக்கப்பட்ட மச்சு பிச்சு!

கிழக்காசிய நாடான ஜப்பானைச் சேர்ந்தவர், ஜெஸ்ஸி தகயாகா, 26. 'கொரோனா' பரவல் துவங்குவதற்கு முன், தென் அமெரிக்க நாடான பெருவுக்கு, சுற்றுலா சென்றார். வைரஸ் பரவல் அதிகரித்ததை அடுத்து, பெருவில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், அவசரம் அவசரமாக வெளியேறினர். ஜெஸ்ஸி மட்டும் வெளியேற மறுத்து விட்டார். 'பெருவில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மச்சு பிச்சு மலைத் தொடரில் அமைந்துள்ள, பழமைவாய்ந்த, கைவிடப்பட்ட நகரத்தை பார்க்க வேண்டும் என்பது, என் வாழ்நாள் ஆசை; அதை பார்க்காமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்...' என, உறுதியாக கூறி விட்டார். எவ்வளவோ சமாதானப்படுத்தியும், அவர் கேட்கவில்லை. இதையடுத்து, உயர் அதிகாரிகள் அனைவரும் ஆலோசனை நடத்தி, ஜெஸ்ஸிக்காக மட்டும், மச்சு பிச்சு சுற்றுலா தலத்தை, சில மணி நேரங்கள் திறந்து விட்டனர். ஆசை தீர சுற்றிப் பார்த்த ஜெஸ்ஸி, 'இவ்வளவு நெருக்கடியான காலத்திலும், எனக்காக சுற்றுலா தலத்தை திறந்த பெரு அரசை, வாழ்நாளில் மறக்க மாட்டேன்...' என, நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !