கவிதைச்சோலை!
நம்மைவிட நன்றாக...அவர்கள்...முதுகில் மட்டுமே குத்துகின்றனர்நாம் நெஞ்சை காட்டதயாராக இருந்த போதும்!அவர்கள்...நேர்மையை நேருக்கு நேர்சந்திக்க துணிவில்லாதவர்கள்கண்ணுக்கு புலப்படாதவிஷக்கிருமிகள்!தரமான எதிரிகள்கிடைக்கக்கூட தவம்செய்ய வேண்டுமோ?இருள் இங்கு ஆட்சிசெய்யவில்லைஒளி குறைவதால்அப்படி ஒரு பிரமை!உலகத்தின்தீமைக்கு காரணம்கெட்டவர்களின் எழுச்சி அல்லநல்லவர்களின் அமைதியே!புகழின் வெளிச்சத்தில்வாழும் போதுசில கறுப்பு நிழல்கள்விழத்தான் செய்யும்!வீழ்வது அவமானமல்லவீழ்ந்தே கிடப்பதுதான்அவமானம்!இறைவா...அவர்களின் பார்வையைதெளிவாக்குஎங்கள் வாழ்வின்வளத்தை, வசந்தத்தைபார்க்கட்டும்!இறைவா...அவர்களின் காதுகளைகூர்மையாக்குஎமது புகழையும்பெருமையையும்கேட்கட்டும்!இறைவா...அவர்களுக்கு எம்மை விடஅதிக ஆயுளை கொடுஎமது பிரமாண்டஇறுதி ஊர்வலத்தில்அவர்களும் நடக்கட்டும்!எமதுகல்லறையின் மீது பாயும்கண்ணீர் நதியில்அவர்களும் நனையட்டும்நம்மை விட நன்றாக!— டாக்டர் வடுகம் சிவக்குமார், சென்னை.