கவிதைச்சோலை!
வருத்தம்!திருமணமானவுடன்நீ தனிக்குடித்தனம்போனதற்குவருத்தமில்லை மகனே!கடன் வாங்கிவீடும், காரும், 'ஏசி'யும்வாங்குவதற்குவருத்தமில்லை மகனே!பாதி நாட்கள்வீட்டில் சமைக்காமல்உணவு விடுதிகளில் செலவழிப்பதற்குவருத்தமில்லை மகனே!பேரனுக்கு பேர் வைக்கக் கூடஒரு வார்த்தை கேட்காததுஆலோசிக்காததுவருத்தமில்லை மகனே!உன் வரவு, செலவு திட்டங்கள் எதையும்சொல்லாததற்குக் கூடவருத்தமில்லை மகனே!பிள்ளைகளை கண்டிக்காமல்அடிக்காமல், செல்லமாகவளர்ப்பதற்குக் கூடவருத்தமில்லை மகனே!தும்மினால் கூடபாட்டி வைத்தியம் கேட்காமல்டாக்டரிடம் போய் செலவழிப்பதற்குவருத்தமில்லை மகனே...உனக்கு இன்று வரைஅதிகம் சுதந்திரம், உரிமைகொடுத்து வளர்த்து விட்டதற்குக் கூடவருத்தமில்லை மகனே...காரணம்...என் அப்பாஎன் மீது கொண்ட வருத்தம்இதை விடப் பெரியது!— 'சொல்கேளான்' ஏ.வி.கிரி, சென்னை.