உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

பாதுகாப்பு...தினம் தினம் வரும்விபத்து செய்திகள் மனதை வருத்துகின்றனபதற வைக்கின்றன!மேம்பாலத்திலிருந்துபேருந்து விழுந்துஇரண்டு பேர் பலி,முப்பது பேர் படுகாயம்...அரசு பேருந்தும்வேனும், நேருக்கு நேர் மோதிஆறு பேர் சாவு,பலர் கவலைக்கிடம்...சாலையோரம் நின்றிருந்தசரக்கு லாரி மீதுசுற்றுலா பேருந்து மோதி,பத்து பேர் மரணம்...மது குடித்துகார் ஓட்டி, அப்பாவி நடைபாதை வாசி மீது ஏற்றிகொல்கிறாள் ஒரு பெண்...நகை பறிக்க முயன்றுவாகனத்தை தள்ளி விட்டுஒரு பெண்ணை பலியாக்குகிறான்கொள்ளைக்காரன்...கடற்கரை சாலையில்கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டிவிபத்துக்குள்ளாகின்றனர்காதலர்கள்...அதிக விபத்துகளுக்கு காரணம்குடி என்றாலும், தடுக்க முடியவில்லைஆண்டுதோறும், ஒன்றரை லட்சம் பேர்நாட்டில் விபத்தால் இறக்கின்றனர்...மனித உயிர்கள் பலியாவதை தடுக்கவாகன ஓட்டிகளை காக்கதீவிர நடவடிக்கை...தீர்வு, தண்டனை... தடுப்பு என்ன?பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின்வலியை எப்படி உணர்த்துவது -முன்னும் பின்னும் பாதுகாப்புடன்வரும் ஆள்பவர்களிடம்!சொல்கேளான் ஏ.வி. கிரி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !