பில்லியனர் கிளப்பில் பாப் பாடகி மடோனா!
அமெரிக்காவை சேர்ந்த, பிரபல பாப் பாடகி மடோனா, சிலிர்க்க வைக்கும் நடனத்தாலும், கிறங்க வைக்கும் குரலாலும், உலகம் முழுவதும் உள்ள, லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர். தற்போது, இவர், ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளார்.அதிகம் சம்பாதித்த, பிரபலங்களின் பில்லியனர் கிளப்பில், மடோனாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. பாப் பாடகி ஒருவர், பில்லியனர் கிளப்பில் இடம் பெறுவது, இதுவே முதல் முறை. கடந்தாண்டு, 'எம்.டி.என்.ஏ.,' என்ற பெயரில், பல்வேறு நாடுகளில், தன் நடன நிகழ்ச்சிகளை நடத்தினார். இதில், அவருக்கு வருமானம் குவிந்தது. இப்போது, மடோனாவின் சொத்து மதிப்பு, 54 ஆயிரம் கோடி ரூபாய். இதனால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் மடோனா. — ஜோல்னா பையன்.