உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

காலத்தை வென்ற கலாம்!மலர்களுக்கு சிரிப்பைத் தந்தாய்மாணவர்களுக்கு கனவு தந்தாய்குழந்தைகட்கு அன்பைத் தந்தாய்இளைஞருக்கு எழுச்சி தந்தாய்மதம் மொழி இனம் கடந்துமக்களை நேசித்தாய்!தலைமுறை தாண்டிமனிதர்(ம்) வாழ யோசித்தாய்அக்னிச்சிறகுகளை அனைவருக்கும்அணிவித்தாய்!உனக்கென எதையும் எண்ணாமல்விண்ணையும் மண்ணையும்உயிராய் கருதினாய்அதனால்தானோ என்னவோஉனதுடல் மண்ணுக்குஉயிர் விண்ணுக்கு!பூக்கள் சிரிக்கும் போதுபூமி சிரிக்கிற தென்றலாய்உன் அஞ்சலிக்கு வந்தமண்ணில் மலர்ந்த மலர்கள் எல்லாம்புண்ணியம் பெற்றதாய் பேசிக்கொண்டனதுக்கத்துடன்!விழிமடை உடைப்பெடுக்கவிடை கொடுத்தோம் இப்போதுராமேஸ்வரம் கடலில் கரிப்பதுஉப்பல்ல...எங்களின் கண்ணீர்!தீபகற்ப இந்தியத்தாய் ஏங்குகிறாள்மீண்டும் உன்னைதன் கர்ப்பத்தில் தாங்கிக் கொள்ள!அணு ஆயுத சோதனையால்அகிலத்தையே வியக்க வைத்த நீஇறுதி வரை ஆராயவேயில்லைஅன்பு கொள்பவருக்காய்ஆயுளை பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தைகண்டிருந்தால்தந்திருப்போம் எங்கள் ஆயுளைஇன்னும் வாழ்ந்திருப்பாய்பல கோடி ஆண்டு!அப்துல் கலாம்... நீஒற்றை வார்த்தையில்உருவான இந்தியக் கவிதை!எழுத எழுத முடிவில்லாமல் நீளும்உன்னைப் பற்றிதற்காலிகமாய் முடிக்கிறேன்வைக்காது விட்ட முற்றுப்புள்ளியுடன்!— ஜோதி பெருமாள், புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !