உள்ளூர் செய்திகள்

சமையலறையில் பாதுகாப்பாக இருக்க...

* வீட்டில் அளவுக்கு அதிகமான பாதுகாப்பு இருக்க வேண்டிய ஒரே இடம், சமையலறை தான். அங்கு, நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, உங்கள் கவனத்தை திசை திருப்புவதில், குழந்தைகள் முக்கிய காரணமாகின்றனர். கூர்மையான கத்தி போன்ற கருவிகள், அடுப்பு மேடையில் இருப்பதால், அவர்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், குழந்தைகளை, சமையலறைக்குள் வர அனுமதிக்காதீர்* சமையல் அறையில், நிதானமாக வேலை செய்ய வேண்டும். அவசர அவசரமாக செய்யும் போது, கவனக்குறைவு ஏற்பட்டு, அதனால், விபத்துகள் நேரிடும். காய்கறிகளை வேகமாக நறுக்குவதால், உங்கள் விரல்கள் காயப்படும். அதே போல், அடுப்பில் இருக்கும் சூடான சட்டி அல்லது குக்கரை வேகமாக இறக்க முயற்சி செய்யாதீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !