வாக்குறுதியை நிறைவேற்றிய மாணவர்கள்!
தேர்தல் வந்து விட்டால், அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்கள் காதில் பூ சுற்றுவது வழக்கம். ஆனால், கேரளாவில், திரிச்சூரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற, மாணவர் தேர்தலில், 'நாங்கள் வெற்றி பெற்றால், உணவு இன்றி தவிக்கும் ஏழைகளுக்கு, உணவு அளிப்போம்...' என, வாக்குறுதி அளித்து, வெற்றி பெற்றனர் ஒரு தரப்பு மாணவர்கள். சொன்னது போன்றே, இரு ஆண்டுகளாக ஏழைகளுக்கு உணவு அளித்து வருகின்றனர். மாணவ பருவத்திலேயே பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் இவர்களை பாராட்டுவோம்!- ஜோல்னாபையன்.