உள்ளூர் செய்திகள்

அந்த பெரிய மனசு இருக்கே...

நம் அண்டை நாடான சீனாவில், 'ஜியாங்கி வெஸ்ட் டியாஜு' என்ற பெயரில், இரும்பு பொருட்கள் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து, உலகின் பல நாடுகளுக்கு, இரும்புப் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில், இந்த நிறுவனத்தின் லாபம், பல மடங்கு அதிகரித்து விட்டதால், அதன் உரிமையாளர், மகிழ்ச்சியில் திக்கு முக்காடி விட்டார். நிறுவனத்தில் பணியாற்றும், 4,116 தொழிலாளர்களுக்கு, விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கியுள்ளார். சமீபத்தில், சீனாவின் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. அன்று, மிகப் பிரமாண்டமான மைதானத்தில், அனைத்து கார்களையும் நிறுத்தி வைத்து, தொழிலாளர்களுக்கு, அவற்றின் சாவிகளை வழங்கினார். இந்த கார்களின் மொத்த மதிப்பு, 560 கோடி ரூபாயாம். அத்துடன், ஐந்தாண்டுக்கான இன்சூரன்ஸ் தொகையையும், உரிமையாளரே செலுத்தி உள்ளார். 'அவருக்கு ரொம்ப பெரிய மனசு சார்...' என, நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர், தொழிலாளர்கள். ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !