தீபத்தில் முப்பெரும் தேவியர்!
திருக்கார்த்திகை அன்று, வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவது, மிகவும் சிறப்பு. இவ்வாறு ஏற்றும் தீபத்தில், பார்வதி, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி எழுந்தருளி, அருள் வழங்குகின்றனர். தீபச் சுடரில் மகாலட்சுமியும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியில் சரஸ்வதியும், இடப் பக்கத்தில் பார்வதி தேவியும் இருப்பதாக ஐதீகம். எனவே, வீட்டில் விளக்கேற்றுவதன் மூலம், முப்பெரும் தேவியரையும் வீட்டிற்கு அழைக்கிறோம்.