உள்ளூர் செய்திகள்

அதிசய குதிரை!

ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள யகுடியா என்ற நகரம், குளிர் பிரதேசம். இங்கு, குளிர்காலங்களில், உடலை உறைய வைக்கும், மைனஸ், 70 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் நிலவும். இதுபோன்ற நேரங்களில், மனிதர்கள், வெளியில் தலை காட்டவே முடியாது. ஆனால், இங்கு வசிக்கும் யகுடி என்ற வகையைச் சேர்ந்த குதிரைகள், இந்த பயங்கரமான குளிரிலும், ஆடாமல் அசையாமல், விடிய விடிய திறந்த வெளியில் நிற்க கூடிய திறன் உடையதாக உள்ளன. ஒரு குதிரையின் எடை, சாதாரணமாக, 500 கிலோ வரை உள்ளது. 300 கிலோ எடையிலான சுமையை சுமந்து செல்லும் திறன், இவைகளுக்கு உண்டு. 'இந்த குதிரையின் தோல் பகுதி, மிகவும் தடிமனாக உள்ளதால், எவ்வளவு கடுமையான குளிரையும் எளிதில் தாங்குகின்றன...' என்கின்றனர், இங்கு வசிப்பவர்கள். ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !