உள்ளூர் செய்திகள்

அன்று, திருநங்கை; இன்று, நீதிபதி!

பலரை குப்பையில் இருந்து, கோபுரத்துக்கு கல்வி அழைத்துச் சென்று விடுகிறது. ஜோயிதா மண்டல் என்ற திருநங்கையும் அப்படி தான். டில்லி தெருக்களில் பிச்சை எடுத்த இவர், இன்று, உத்தரபிரதேசம், தில்லியாபூர் இஸ்தான்புல் மாவட்ட நீதிபதி. வேலை கேட்டு சென்ற இடங்களில் எல்லாம் திருநங்கை என்று விரட்டியடிக்கப்பட்டார், ஜோயிதா மண்டல். அதனால், தெருக்களில் பிச்சை எடுத்தார்; ஆனால், முன்னேறும் லட்சியத்தை மட்டும் கை விடவில்லை. பசியிலும், பட்டினியிலும், படிப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இன்று, பிச்சை எடுத்த தெருக்களுக்கு அருகே உள்ள நீதிமன்றத்தில் இருந்து, நீதி வழங்கி வருகிறார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !