உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல!

பாகுபலி - 2!இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி, வசூலில் சாதனை படைத்த படம், பாகுபலி; இப்படத்தில் கட்டப்பா கதாபாத்திரம், எதற்காக பாகுபலியை கொன்றார் என்பதை கூறாமலேயே, 'சஸ்பென்ஸ்' வைத்து, கதையை முடித்திருந்தார் இயக்குனர் ராஜமவுலி. தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளவர், 'ஏப்., 14, 2017ல் பாகுபலி - 2 வெளியாக உள்ளது; அப்போது அதற்கான பதிலை தெரிந்து கொள்ளுங்கள்...' என்று அறிவித்துள்ளார்.— சினிமா பொன்னையாநயன்தாரவை வீழ்த்திய ராகுல் ப்ரீத் சிங்!தெலுங்கில் சிரஞ்சீவியின், 150வது படத்தில் நடிக்கும் நயன்தாரா, தமிழில், ஜெயம் ரவியுடன், தான் நடித்த, தனி ஒருவன் படமும், தற்போது, தெலுங்கில் ரீ- மேக் ஆவதால், அப்படத்தையும் கைப்பற்ற முயற்சி செய்தார். ஆனால், தற்போது, தெலுங்கில் முன்னணியில் இருக்கும் ராகுல் ப்ரீத் சிங்கிற்கு, அப்பட நாயகன் ராம்சரண் தேஜா சிபாரிசு செய்து விட்டார். அதனால், கடைசி நேரத்தில், தோல்வி முகத்துடன் பின்வாங்கி விட்டார் நயன்தாரா. ஆகிறது அரைக்காசில் ஆகும்; ஆகாதது ஆயிரம் பொன்னாலும் ஆகாது!— எலீசா.மதுரை தமிழ் பேசும் தமன்னா!விஜயசேதுபதியுடன், தர்மதுரை படத்தில், மதுரை பெண்ணாக நடிக்கும் தமன்னா, நானும் ரவுடிதான் படத்தில், நயன்தாரா தனக்குத் தானே, 'டப்'பிங் பேசியதை போன்று, அவரும், இப்படத்தில், 'டப்'பிங் பேசப் போகிறார். அதனால், மதுரை தமிழை பேச பயிற்சி எடுத்து வருபவர், படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கும் மதுரை பெண்களிடம் சகஜமாக பேசி, அவர்களின் தமிழ் உச்சரிப்பை உள்வாங்குகிறார். அடி சக்கை பொடி மட்டை! — எலீசாதெலுங்கு மற்றும் கன்னடத்தில் அஜித் படம்!சிவா இயக்கத்தில், அஜித் நடித்து வெளியான, வேதாளம் படத்தின் வெற்றியைப் பார்த்து, மற்ற மொழிகளிலும், அதன் ரீ - மேக் உரிமையை, பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளனர். அவ்வகையில், தற்போது, தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், பவன் கல்யாண் நடிப்பில், வேதாளம் படம், ரீ - மேக்காக உள்ளது. அதேபோல், இப்படத்தை பார்த்து, 'இம்ப்ரஸ்' ஆன கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கன்னடத்தில், ரீ -மேக் செய்யும் உரிமையை வாங்கியுள்ளார்.— சி. பொ.,பஞ்ச் டயலாக் பேசாத ரஜினி!கபாலி படத்தில், 'இன்டர்நேஷனல்' டானாக நடிக்கிறார் ரஜினி. ஆனாலும், ஒரு கட்டத்தில் குழந்தைகளுக்கான ஆசிரமம் நடத்தி, வாழ்க்கைப் பாதையை மாற்றிக் கொள்கிறார். அந்த நேரத்தில் மறுபடியும் பழைய எதிரிகள் அவரை சீண்ட, மறுபடியும் அவர், கபாலி அவதாரம் எடுப்பது தான் படத்தின் கதை. ரஜினியின் படங்களில் எப்போதுமே, 'பஞ்ச் டயலாக்' இருக்கும். ஆனால், இப்படத்தில் அந்த மாதிரி எதுவும் இல்லை என்றாலும், அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களுமே, 'பவர்புல்'லாக உள்ளதாக கூறுகின்றனர்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!* தளபதி நடிகரின் படத்தில், மகளை நடிக்க வைத்துள்ள இரண்டெழுத்து நடிகை, இளவட்ட இயக்குனர்களிடம் நட்பு வளர்த்து வருகிறார். அத்துடன், 'என்னை மாஜி கதாநாயகி என்று ஓரங்கட்ட வேண்டாம்; இப்போதும், நான் இளவட்ட நடிகை என்கிற மனநிலையில் தான் இருக்கிறேன். அதற்கேற்ப உடல்கட்டையும் பராமரித்து வருகிறேன்...' என்று கூறி, சிரிப்பை சிதற விடுகிறார்.* பிரியமான நடிகை, சில இளவட்ட கதாநாயகர்களை மலைபோல் நம்பியிருந்தார். ஆனால், அவர்களோ சில புதுவரவு நடிகைகளுக்கு, சிபாரிசு செய்ய துவங்கி விட்டனர். இதனால், படமே இல்லாத நிலையில், தற்போது நடிகர்களை நம்புவதை விடுத்து, சில நரைமுடி தயாரிப்பாளர்கள் பக்கம் சாய்ந்திருப்பவர், வீக் எண்ட் பார்ட்டிகளை, அவர்களுடன் இணைந்து, கொண்டாடுகிறார்.சினி துளிகள்!* உத்தரவு மகாராஜா படத்தில், மூன்று வேடங்களில் நடிக்கிறார் உதயா.* தனுஷின், ரயில் பட டைட்டிலை, மிரட்டு என்று மாற்றப் போகிறாராம் இயக்குனர் பிரபுசாலமன்.* த்ரிஷ்யம் படத்தை தொடர்ந்து, மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் மீனா.* நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்ட, ஏப்., 10ம் தேதி சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த உள்ளனர்.* முத்துராமலிங்கம் படத்தில், கவுதம் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்துள்ளார் பிரியா ஆனந்த்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !