தள்ளு வண்டி உணவகங்கள்!
நம் நாட்டில், சாலையோர நடமாடும் தள்ளு வண்டி உணவகங்கள், சுகாதாரமற்ற முறையில் செயல்படுவதாக தெரிந்தாலும், 'முனிசிபாலிட்டி மற்றும் கார்ப்பரேஷன்' அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆனால், ஐரோப்பா கண்டத்திலுள்ள, சுவீடன் போன்ற நாடுகளில், அப்படி இல்லை. வடக்கு பின்லாந்து கடற்கரை நகரமான எஸ்தோனியா, டாலின் தெருவில் இருக்கிறது, இந்த தள்ளு வண்டி உணவகம். பலவகை உணவு பண்டங்களுடன், வாடிக்கையாளர்களை நோக்கி காத்திருக்கிறார், ஓர் அழகான பெண். நம் ஊர் தள்ளு வண்டி உணவகங்களை, சற்று சிந்தித்து பாருங்களேன். — ஜோல்னாபையன்.