60 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை!
சீனாவைச் சேர்ந்த, ஷெங் ஹெய்லின் என்ற பெண்ணுக்கு, 60 வயதாகிறது. இவரின் ஒரே மகள், தன், 29 வது வயதில், உடல் நலக்குறைவால், சமீபத்தில் இறந்து விட்டார். இதனால், மகளை மறக்க முடியாமல், சோகத்தில் மூழ்கிய ஷெங், உடல்நிலை நாளுக்கு நாள்மோசமானது. கவலை அடைந்த, அவரின் கணவர், டாக்டரை சந்தித்து, 'என் மனைவி, தன் சோகத்தை மறக்க வேண்டுமானால், மீண்டும் எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும்...' என கூறினார். இதன்பின், இருவரும், இன விருத்திக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டனர். இதன்பலனாக, ஷெங் ஹெய்லினுக்கு, சமீபத்தில், இரட்டை குழந்தைகள் பிறந்தன. குழந்தை பிறந்த சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும், 'குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் வரை, நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டுமே...' என, ஹெய்லினும், அவரின் கணவரும், ஆதங்கத்தில் உள்ளனர்.— ஜோல்னா பையன்.