உள்ளூர் செய்திகள்

பாடகியின் இரண்டு ஆசைகள்!

பார்வை இல்லாத வைக்கம் விஜயலட்சுமி என்பவர், ஆறு வயதில், பாடகர் ஜேசுதாசை மானசீக குருவாக ஏற்று, பாட்டு பாடத் துவங்கியவர் இன்று, புகழின் உச்சியில் இருக்கிறார். இருபது ஆண்டு இசை அனுபவத்தில் கிடைக்காத பேரும், புகழும், 'செல்லுலாய்டு' என்ற மலையாள படத்தில், பழைய பாணியில் பாட்டுப் பாடி, புகழ் பெற்று இருக்கிறார்.சிறு வயதிலிருந்தே, பார்வை இல்லாத தன் மகளை, எப்படியாவது உலகம் போற்றும் பெண்ணாக வளர்க்க வேண்டும் என்று, பெற்றோர் முடிவு செய்தனர். அவர்களது கடும் முயற்சியால், இன்று, விஜயலட்சுமி ஏராளமான பரிசுகளை பெற்று இருக்கிறார். தனக்கு, இரண்டு ஆசைகள் மட்டும் உள்ளன என்று கூறும் அவர், 'ஜேசுதாசுடன் இணைந்து பாட வேண்டும், இந்நிலையிலும், என்னை உளமார நேசிக்கும் ஒருவரை, மணக்க வேண்டும்....' என்கிறார். இரண்டு ஆசைகளும் நிறைவேற வாழ்த்துங்களேன்!— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !