பணம் சம்பாதிக்க ஆசையா?
பணம் சம்பாதிக்க எல்லாருக்கும் ஆசை. உலகில், 2,153 கோடீஸ்வரர்கள் உள்ளனர். இவர்களில், 53 பேர், நடுத்தர வயதை கூட அடையாதவர்கள். இவர்கள் பணம் சம்பாதிக்க எவை தேவை என்பதை, தங்கள் அனுபவத்தின் மூலம் சொல்கின்றனர்.பணம் சம்பாதிக்க, வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டிய அவசியமில்லை. குறுகிய காலத்தில் கூட அதை சம்பாதிக்க முடியும். ஆனால், இளம் வயதிலேயே கோடீஸ்வரர்களாக ஆனவர்கள், அப்படி சாதிக்க என்னென்ன தேவை என்று கூறியுள்ளனர்.அவை:* போதுமான, 'ரிஸ்க்' எடுத்து செயல்படாததே, நம்முடைய பல தோல்விகளுக்கு காரணம். ஆக, அவசியமானால், 'ரிஸ்க்' எடுத்து வெற்றியை ருசிப்போம்* மற்றவர்களின் வெற்றிகளை உற்று கவனித்து, அதன்படி நடக்க முயலாதீர்கள். மாறாக, நீங்களே உங்கள் வெற்றி வழியை தீர்மானித்து அதன்படி செயல்படுங்கள்; வெற்றி தேடி வரும்* அடுத்த அடி எடுத்து வைக்கும்போது, பல சிக்கல்கள் வருமோ என, பயந்து தயங்காதீர்கள். மாறாக, அடுத்த அடியை தைரியமாய் எடுத்து வையுங்கள். அப்போது, வரக்கூடிய சிக்கலை சமாளிக்கும் திறமையும், தெம்பும் தானாக வரும்* அவசியமானால், அடுத்தவரிடம் உதவி கேட்க தயங்காதீர். இப்படி அடுத்தவர்களிடம் அவசியமானபோது உதவி கிடைக்க பெற்றவர்கள் தான், இன்று தொழில் நிபுணர்களாக வந்துள்ளனர்* எந்த கட்டத்திலும், சேமிப்பை தொடருங்கள்* வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது மட்டுமே முக்கியம் இல்லை. உங்களுடைய செயல்கள் மூலம் கிடைக்கும் அனுபவமே, மற்றவர்களுக்கு பயன்படுவது போல் அமையட்டும். அதை பார்த்து அவர்களும், தாங்களும் சாதிக்க வேண்டும் என, யோசிக்கட்டும்இதையெல்லாம் பின்பற்றி, நாமும் எதிர்காலத்தில் லட்சாதிபதி, அடுத்து கோடீஸ்வரர் என, மாற முயற்சிப்போம்.— ஜோல்னாபையன்