நாங்களும் சாதிப்போம்ல!
'பெண்கள், எப்போதுமே எளிதான, இலகுவான வேலைகளைத் தான் செய்வர்...' என்ற வதந்தியை, அடித்து நொறுக்கியுள்ளார், ஆசிய நாடான, ஜப்பானைச் சேர்ந்த, 21 வயதே ஆன, இளம் பெண், ரினோ சசாகி.இவர், டோக்கியோ உள்ளிட்ட நகர சாலைகளில், மிக பிரமாண்டமான, 'கன்டெய்னர்' வாகனத்தை, லாவகமாக ஓட்டிச் சென்று, அசத்துகிறார். தெற்காசிய நாடுகளிலேயே, கன்டெய்னர் வாகனத்தை இயக்கும் முதல் பெண், இவர் தான்.இதுகுறித்து ரினோ கூறுகையில், 'என் தந்தை, கன்டெய்னர் டிரைவராக இருந்தார். திடீரென, அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், குடும்ப சூழ்நிலை காரணமாக, நான் இந்த வேலைக்கு வர வேண்டியதாகி விட்டது. முதலில் சிரமமாக தான் இருந்தது. இப்போது பழகி விட்டது...' என்கிறார்.— ஜோல்னாபையன்.