ஏன் இந்த விபரீத ஆசை?
பிரான்சை சேர்ந்த குவென்டினா - அனஷ்டஷியா தம்பதிக்கு, பார்பி - கென் பொம்மைகளை போல், தாங்களும் மாற வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டது. இதற்காக இவர்கள், இதுவரை, இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து, தங்கள் உடல் மற்றும் முகத்தில் ஏராளமான, 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்துள்ளனர். பார்பி என்பது, பெண் பொம்மை. இந்த பொம்மையின், 'பாய் பிரண்டு' தான், கென் என்ற ஆண் பொம்மை. குழந்தைகளால் விரும்பப்படும் இந்த பொம்மைகள், 50 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரபரப்பாக விற்பனையாகின்றன.'அடிக்கடி பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படுமே... ஏன் இப்படி ஆபத்துடன் விளையாடுகிறீர்கள்...' எனக் கேட்டால், 'ஆபத்து இல்லாத வாழ்க்கையில், சுவாரசியம் இல்லை. ஏதாவது சாதித்து விட்டு சாவோமே...' என்கின்றனர் இருவரும்!— ஜோல்னாபையன்.