யம தீபம் எதற்கு?
தீபாவளி பண்டிகைக்கு முன், மகாளய பட்ச காலத்தில், நம் முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம், பூமிக்கு வரும் நம் முன்னோர், நம் வழிபாடுகளை ஏற்று, மனத்திருப்தியுடன் மேலுலகம் திரும்புவது, தீபாவளி அமாவாசையன்று தான். இருட்டில் அவர்களுக்கு பாதை தெளிவாக தெரிய வேண்டும் என்பதால், தீபாவளிக்கு முதல் நாள் இரவு, யம தீபம் ஏற்ற வேண்டும். பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றி, வீட்டு மொட்டை மாடி மற்றும் கூரை என, உயரமான இடத்தில் தெற்கு நோக்கி வைத்து, 'ஸ்ரீ யமாய நம... ஸ்ரீ தர்ம ராஜாய நம... சாந்த காயச் சித்ரகுப்தாய நம...' என்ற மந்திரத்தை சொல்லி வழிபடுவது சிறப்பு!